என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » இந்தி நடிகை
நீங்கள் தேடியது "இந்தி நடிகை"
பிரபல இந்திய நடிகை ஊர்மிளா இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து ராகுல் காந்தி வரவேற்றார். #LokSabhaElections2019 #Urmila #Congress
புதுடெல்லி:
பிரபல இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர்(வயது 45). ‘ரங்கீலா’ படம் மூலம் புகழ் பெற்ற இவர் தமிழில் கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் படத்தில் நடித்துள்ளார். தற்போது பாராளுமன்றத் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியில் இணைய விரும்பிய நடிகை ஊர்மிளா, இது தொடர்பாக மும்பை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சஞ்சய் நிரூபத்தை சந்தித்து உறுதி செய்தார்.
இதையடுத்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து அவர் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். அவருக்கு ராகுல் காந்தி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும், கட்சி வளர்ச்சிக்கு சிறப்பாக பணியாற்றும்படி வாழ்த்தினார். ராகுல் காந்தியுடனான இந்த சந்திப்பின்போது எடுத்த புகைப்படத்தை காங்கிரஸ் கட்சி டுவிட்டர் மூலம் வெளியிட்டு உறுதி செய்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மற்றும் நிலைப்பாட்டின் மீது நம்பிக்கை உள்ளதால் கட்சியில் இணைந்ததாகவும், தேர்தல்களுக்காக இணையவில்லை என்றும் ஊர்மிளா கூறினார்.
ஊர்மிளா மும்பை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #LokSabhaElections2019 #Urmila #Congress

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, காங்கிரஸ் கட்சியின் கொள்கையை பரப்பி, கட்சியை வலுப்படுத்தும் பணியில் நடிகை ஊர்மிளா ஈடுபடுவார் என்றார்.
காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மற்றும் நிலைப்பாட்டின் மீது நம்பிக்கை உள்ளதால் கட்சியில் இணைந்ததாகவும், தேர்தல்களுக்காக இணையவில்லை என்றும் ஊர்மிளா கூறினார்.
ஊர்மிளா மும்பை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #LokSabhaElections2019 #Urmila #Congress
பழம் பெரும் இந்தி நடிகை மவுஸ்மி சட்டர்ஜி டெல்லியில் அமித்ஷா முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தார். #MoushumiChatterjee
புதுடெல்லி:
பழம் பெரும் இந்தி நடிகை மவுஸ்மி சட்டர்ஜி. கொல்கத்தாவில் பிறந்த இவர் 1960 மற்றும் 1970- களில் பாலிவுட்டை கலக்கியவர். இதே போல் பெங்காலி மொழியிலும் வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
மவுஸ்மி சட்டர்ஜி பிரபல இந்தி நடிகர்களான ராஜேஷ் கன்னா, சசிகபூர், ஜிதேந்திரா ஆகியோருடன் நடித்துள்ளார். 70 வயதான அவர் தற்போது மும்பையில் கணவர் ஜெயந்த் மற்றும் மகள்களுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் மவுஸ்மி சட்டர்ஜி டெல்லியில் அமித்ஷா முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தார். மேற்கு வங்காள பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் முகுல்ராய், பா.ஜனதா பொதுச் செயலாளர் கைலாஷ், விஜய் வராகியா ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மேற்கு வங்காளத்தில் பா.ஜனதாவை பலப்படுத்த விரும்புவதாக மவுஸ்மி சட்டர்ஜி தெரிவித்தார்.
மவுஸ்மி 2004 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கொல்கத்தா வடகிழக்கு தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் தற்போது பா.ஜனதாவில் இணைந்துள்ளார்.
2019 பாராளுமன்ற தேர்தலில் மவுஸ்மி பா.ஜனதா சார்பில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #MoushumiChatterjee

ரபேல் விமான பேர ஒப்பந்தத்தில் என்ன நடந்தது என்பதை இந்தி நடிகை பல்லவி ஜோஷியை வைத்து பா.ஜனதா விளக்கம் அளித்துள்ளது. #BJP #RafaleDeal #PallaviJoshi
புதுடெல்லி:
ரபேல் போர் விமானங்கள் வாங்குவதில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதை மறுத்து வரும் பா.ஜனதா, இந்த ஒப்பந்தத்தில் என்ன நடந்தது என்பதை இந்தி நடிகை பல்லவி ஜோஷியை வைத்து விளக்கம் அளித்துள்ளது.
பல்லவி ஜோஷி நடித்து, 2.19 நிமிட நேரம் ஓடும் வீடியோ படத்தை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பா.ஜனதா தகவல் தொழில்நுட்ப பிரிவு நேற்று வெளியிட்டது.
அதில், “மலிவான விலையில் போர் விமானங்கள் வாங்குவதே ரபேல் ஒப்பந்தத்தின் நோக்கம். இதுபோல், ஏவுகணைகளையும் வாங்குவோம். அவற்றின் உதிரிபாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவுக்கு ரூ.12 ஆயிரத்து 500 கோடி மிச்சம் ஆகியுள்ளது என்பதுதான் மிகவும் முக்கியமான விஷயம்” என்று பல்லவி ஜோஷி கூறுகிறார்.
தனது பேச்சுக்கிடையே, ‘உருளைக்கிழங்கு தொழிற்சாலை’ என்று யாரையோ பெயர் குறிப்பிடாமல் பல்லவி ஜோஷி கிண்டல் செய்வதும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. #BJP #RafaleDeal #PallaviJoshi #tamilnews

×

X